‘ரசிகர்களின் ஆதரவை வைத்து ஆட்சியை பிடிக்க முடியாது’ – சீமான்..!

0
137

நடிகர் விஜய் இன்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.

சீமான் கூறியதாவது, “விஜய் என்ன தத்துவத்தை முவைக்கிறார் என்று உள்ளது. தொடங்குவது எளிது, தொடர்வது மிகவும் கடினமானது. கட்சியைத் தொடங்கும்போது இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும், தொடர்ந்து இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் ஒரு நடிகருக்கு அவரது ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி வென்று நாட்டை ஆள்வது என்பது சரித்திர புரட்சியாக மாறிவிடும். பொதுவான மக்களை ஈர்க்க வேண்டும். எம்ஜிஆர்-க்கு பொதுவான மக்களின் ஆதரவு இருந்தது.

ஆகையால், மன்னை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக செல்ல வேண்டும். அது உடனடியாக செய்துவிட முடியாது, நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் அதனை விஜய் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here