TVK Vijay: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். தொடர்ந்து, கட்சி சார்ப்பில் பல்வேறு கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
அதில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் கட்சி தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி நேற்று (மார்ச் 8) அறிமுகம் செய்யப்படப்பட்டுள்ளது.
இந்த தவெக செயலியில் கட்சியின் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துக்கொண்டார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து, அனைவரையும் உறுப்பினராக சேரும் படி கேட்டுக்கொண்டார்.
அந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்து 48 நிமிடங்களில் ஒரு மில்லியன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் விண்ணப்பிக்க தொடங்கியதும் சர்வரே செயலிழந்துபோய்விட்டது.
இதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் விரைவில் சர்வர் சரி செய்யப்படும் எனவும் அதன் பிறகு தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
விஜய் வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து அந்த கட்சியில் இணைய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என விஜய் கூறிய நிலையில் தற்போது நடந்த இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியபடவைத்துள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்ட மற்ற கட்சியினர் திண்டாடி வருகின்றனர். ஒரு உறுப்பினரை சேர்க்க தொண்டை வலிக்க மேடை போட்டு கத்தி கூப்பாடு போடும் நிலையில் விஜய்க்கு கிடைத்துள்ள ஆதரவைக் கண்டு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆடிப்போய் உள்ளனர்.