சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (பிப்.19) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செயலி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அதன் மூலமாக உறுப்பினர்கள் கட்சியில் இணையலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த ஆலோசனை கூட்டம் மூலம் கட்சியை வளர்க்கத் தேவையான முக்கிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.