‘தமிழக வெற்றிக் கழகம்’ – விஜய்யின் கட்சி பெயர் உறுதி..!

0
140

Tamizhaga Vetri Kazhagam: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், ஒருபுறம் சினிமா, மருபுறம் தனது அரசியல் குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சியை பதிவு செய்ய மக்கள் இயக்கத்தில் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் தனது கட்சிக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என சூட்டப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெறுவது தான் நமது லட்சியம் என விஜய் கூறிய நிலையில் தற்போது முதல் அடியாக தனது கட்சியின் பெயரை விஜய் பதிவு செய்திருக்கிறார்.

இந்த அறிவிப்பிற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும், ரசிகர்களும் காத்திருந்த நிலையில் தற்போது விஜய்யின் கட்சியின் பெயர் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here