திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.1) தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு நாடு முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது ‘X’ தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது ‘X’ தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.