நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவுள்ளதாக கூறியிருக்கிறார்.
விஜய்யின் இந்த அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வரவேற்றாலும், சிலர் விஜய்யை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரை ஆங்கிலத்தில் TVK என அழைக்கப்படுகிறது.
ஆனால், முன்னதாக ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ என்ற பெயரையும் ஆங்கிலத்தில் TVK என்று தான் அழைக்கப்படுகிறது. ஆகையால், இந்த கட்சியின் பெயர் தான் தற்போது பெரிய பிரச்சினையாக ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் TVK என்று வருவதால், TVK என்பதை விஜய்யின் கட்சிக்கு வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்’ என கூறியுள்ளார்.