‘விமர்சனங்களை சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளுங்கள்’ – தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை..!

0
172

Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தனது அரசியல் திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு முழு அரசியல்வாதியாக செயல்பட தொடங்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் நேற்று (பிப் 7) சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களை சந்தித்தார். இது அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் சந்திப்பாகும்.

இந்த சந்திப்பில் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு விஜய்யின் முதல் உத்தரவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நம்மை நோக்கி வரும் தடைகள் மற்றும் விமர்சனங்களை சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளுங்கள்’ என ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். தங்களது நலன் சார்ந்த செயல்பாடுகள் மூலம் கட்சியை கிராமங்களிலும் அறிய வேண்டும், அதற்குண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ‘2026ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நமது இலக்கு என்பதால், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த அரசியலில் ஈடுபட வேண்டும்’ என விஜய் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here