‘அண்ணே ரெடி போஸ்டர் அடி’…! வைரலாகும் மதுரை ரசிகர்களின் போஸ்டர்..!

0
74

மதுரை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவரது ரசிகர்களாகிய தொண்டர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது விஜய் அரசியல் வருகை குறித்து மதுரை ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில், “அன்று சினிமாவில் No 1ஆக இருந்து அரசியல் பயணம் தொடங்கியவர் எம்ஜிஆர். இன்று சினிமாவில் No 1ஆக இருந்து அரசியல் பயணம் தொடங்குபவர் எங்கள தளபதியார். உன் முதல் அரசியல் வெற்றியை பதிவு செய்ய அழைக்கிறது மதுரை.

‘வா தலைவா’ நீ மதுரையில் நின்று வென்று ஆட்சி அமைக்க அழைக்கிறோம்..!” என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக மதுரையில் விஜய் படங்கள் ரிலீஸ் குறித்து ஒட்டப்படும் போஸ்டர்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது முதன் முதலாக விஜய் அரசியல் குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

இதையும் படிங்க: ‘விஜய் அரசியல் குறித்து பண்ண விரும்பல விமர்சனம், நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்’ – TR வாழ்த்து..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here