நாம் அனைவரும் தினந்தோறும் கவலைப்படும் ஒரு விடயம் என்னவென்றால் அது நாம் நினைத்தது நடக்காது தான். இந்நிலையில், ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
அஞ்சநேயரை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அனுமன், ஆஞ்சநேயர், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்கள் கொண்டிருந்தாலும் ராம பக்த அனுமன் என்று சொன்னால் அகம் குளிர்ந்து போவாராம் ஆஞ்சநேயர்.
வைஷ்ணவக் கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், ஆஞ்சநேயருக்கு இந்தியா முழுவதிலும் தனிக்கோயில்களும் உள்ளன.
செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, சனிக்கிழமைகளில் அனுமனைத் தரிசிப்பதும் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், ஹனும மந்திரத்தை ஜபித்தும் வழிபடுவது காரியத்தடைகளையெல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே ராமதூதாய லங்காவித்வம் ஸனாய; அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய ஸாகினி டாகினி வித்வப் ஸனாய கிலகிய பூபூ காரினே விபீஷணாய ஹனுமத் தேவா யஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அவசியம் சொல்லுங்கள். அனுமனைத் தரிசித்து வேண்டுங்கள். காரியத்தை வீரியமாக்கித் தந்தருளுவார். இந்த மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லி வாருங்கள்.
அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள் என்பது நம்பிக்கை.
வாயும் மைந்தனாக, ஸ்ரீ ராமனின் சேவகனாக, சிவ பெருமானின் அவதாரமாக இருப்பவர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.