மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?

0
176

மார்கழி மாதம் என்பது மிகவும் புண்ணியமான காலமாகும். மார்கழி மாதம் என்பது தேவர்களின் மாதம் என கூறுவது உண்டு. இது இறை வழிபாட்டிற்கான மாதம் என்பதால் சுப காரியங்கள் எதுவும் இந்த மாதத்தில் நடத்தப்படுவது கிடையாது.

சைவ, வைணவ பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆலங்களிலும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு, பஜனை செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மார்கழி மாதத்தில் தான் பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவும், சிவனுக்குரிய ஆருத்ரா தரிசன விழாவும் நடத்தப்படுகிறது.

தமிழ் மாதங்களிலேயே மார்கழி மாதத்தில் தான் நாம் செய்கின்ற வழிபாடுகள் அனைத்திற்கும் பல மடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மார்கழியின் 30 நாட்களும் ஒரே ஒரு வழிபாட்டினை நம்முடைய வீட்டில் தவறாமல் செய்து வந்தால், நம்முடைய வாழ்விலும், வீட்டிலும் இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

மார்கழியின் 30 நாட்களும் காலையில் பிரம்ம முகூர்த்த எனப்படும் 04.30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து தலைக்கு குளித்து விட்டு, வீட்டில் பூஜை செய்ய வேண்டும். வீட்டிற்குள் பூஜை அறையில் பூஜை செய்வதற்கு முன், வீட்டு வாசலில் சிறிய வழிபாடு ஒன்றை செய்ய வேண்டும். வாசலில் சாணத்தால் மெழுகி, பச்சரிசி மாவினால் கோலிடமிட வேண்டும். கிராமத்தில் இருப்பவர்களுக்கு சாணம் கிடைக்கும்.

வாசலில் அரிசி மாவினால் கோலமிடுவது மிகப் பெரிய புண்ணிய பலனை பெற்றுத் தரும். அரிசி என்ற சொல்லில் அரி என்பது பெருமாளையும், சி என்பது சிவனையும் குறிக்கிறது. அரியும், சிவனும் ஒன்றாக இணைந்து இருக்கும் அரிசி மாவினால் கோலமிடுவது வீட்டிற்கு தெய்வீக தன்மையை தரும். இதனை செய்துவந்தால் நம் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here