ஐபிஎல் அதிகாரி மீது தோனி தொடர்ந்த வழக்கு.. 15 நாட்கள் சிறை தண்டனை..!

0
115

MS Dhoni: சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎல் அதிகாரிக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஐபிஎல் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here