CSK vs SRH:  அபார வெற்றி பெற்ற சென்னை அணி..! புதிய சாதனை படைப்பு..!

0
41

IPL 2024: ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 46ஆவது லீக் போட்டியானது நேற்று (ஏப்ரல் 28) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டமானது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது.

இதில், பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டமானது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராதாபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மேலும், இந்த போட்டியின் மூலம் சென்னை அணி புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி, சென்னை அணி இந்த போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் தனது 35ஆவது 200 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here