CSK vs DC : முட்டி மோதிய சென்னை.. முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி..!

0
48

CSK vs DC IPL2024: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நேற்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். பின்னர் பிரித்வி 43 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களில் அவுட்டானார்.

டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் தனது அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவிக்க தொடங்கினார். 32 பந்துகளில் அவர் 51 ரன்கள் எடுத்தார். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்த டெல்லி அணி 191 ரன்கள் குவித்தது.

இதில், சென்னை அணியின் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது.

இதில், சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன் எடுக்க ரச்சின் ரவிந்திரா 2 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய அஜிங்யா ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இருவரும் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது மிட்செல் 34 ரன்களிலும், ரஹானே 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த சமிர் ரிஸ்வி முதல் பந்திலேயே கேட்ச் அகி பெவிலியன் திரும்பினார்.

வழக்கம்போல் கடைசி ஓவர்களில் தோனி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க தொடங்கினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தோனி 37 ரன்களும், ஜடேஜா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதுவரை சென்னை அணி 3 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு பேட்டிகளில் வெற்றிப் பெற்றது. ஒரே ஒரு போட்டி மட்டும் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here