IND vs SA: முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்.. இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விலகல்..! என்ன காரணம்?..

0
166

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (டிச.17) நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

அதன் படி முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (டிச.17) இந்திய நேரப்படி மதியம் 1:30 மணியளவில் தொடங்குகிறது.

மேலும், இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு 42 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 58 விழுக்காடு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய – தென் ஆப்ரிக்கா இடையிலான ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாகவும், டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தீபக் சாஹருக்குப் பதிலாக ஆகாஷ் தீப்பை அணியில் சேர்த்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், ஷமி விலகளுக்கான காரணம் குறித்தும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன் படி ஷமியின் உடல்தகுதி குறித்து மருத்துவக் குழுவிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் ஷமி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் விலகியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here