CSK vs SRH: அதிரடி காட்டிய சென்னை.. 213 ரன்கள் இலக்கை எட்ட துடிக்கும் ஹைதராபாத்..

0
144

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில்பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய இரண்டாவது போட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான ரஹானே 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.  தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, அபிஷேக் ஷர்மா 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

தொடர்ந்து களம் இறங்கிய அன்மோல்பிரீத் சிங் டக் அவுட் ஆகினார். அதனைத் தொடர்ந்து தற்போது, 5 ஓவர்களில் 45 ரன்களுடன் எய்டன் மார்க்ரம் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here