IPL 2024: சென்னை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!

0
99

CSK vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18ஆவது ஆட்டம் இன்று (ஏப்ரல் 5) ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியிடம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அடுத்த நடந்த ஆட்டத்தில் மும்பைக்கு அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அடுத்ததாக குஜராத் அணியுடன் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்தது. கடைசியாக நடந்த ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணியுடன் இன்று மோதவுள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 14 முறையும், ஹைதராபாத் அணி 5 முறையும் வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here