‘எங்களது தோல்விக்கு இதுதான் காரணம்’ – கேப்டன் ருதுராஜ் கூறுவது என்ன?

0
86

CSK vs DC IPL2024: டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கிய நிலையில் 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “எங்களது அணியின் பவுலர்கள் முதல் 6 ஓவர்களுக்கு பிறகு நல்ல கம்பேக் கொடுத்தனர். டெல்லி அணியை 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பாராட்டிற்குறியது.

முதல் இன்னிங்ஸின்போது இந்த பிட்சில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. இந்த ஸ்விங்கின் காரணமாகவே ரச்சின் ரவீந்திரா நிறைய பந்துகளை மிஸ் செய்தார்.

இந்த ஸ்விங்கும் எங்களது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. முதல் 10 ஓவர்கள் முடிந்த பிறகு இலக்கை எட்டிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டோம், இது ஒரு பின்னடைவாக இருந்தது.

நாங்கள் ரன் ரேட்டை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலே விளையாடினோம். டெல்லி அணி பேட்டிங்கின்போது முதல் நான்கு ஓவர்கள் நன்றாக வீசினோம். ஆனால், பவர்பிளேவின் கடைசி இரண்டு ஓவர்களில் கொஞ்சம் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம். இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சாதாரணம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here