“அது அவன் ஊருடா, அவன் ஊருக்கு அவன் போகக்கூடாதா?” – மாரிசெல்வராஜுக்கு ஆதரவு தெரிவித்த வடிவேலு..!

0
146

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது வீடு, வாகனம் உள்ளிட்ட பொருள்களை இழந்து தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நேரில் சென்று தனது குடும்பத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த வெள்ளத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் சிக்கித் தவித்துவருவதை அறிந்த மாரிசெல்வராஜ் இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவரும் சம்பவ இடத்திற்குச் சென்றார். இதனால் மக்கள் மீட்கப்படுவது துரிதப்படுத்தப்பட்டது.

இதனைக் கண்ட சிலர், இயக்குநரின் இந்த செயலை கண்டு ஆற்றாமை பொறுக்காத சிலர் உதயநிதியுடன் ஆய்வு பணிகளில் ஈடுபட இவர் யார்? என விமர்சித்தனர். இயக்குநருக்கு இங்க என்ன வேலை என கேட்டு வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாரிசெல்வராஜ், தான் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உதயநிதி இங்கு வந்தார் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து நடிகர் வடிவேலு விமர்சித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “அது அவன் ஊருடா, அவன் ஊருக்கு அவன் போகக்கூடாதா? தப்பு தப்பா பேசுறாங்க. நானும் கோபத்தை அடக்கி பாக்குறேன் என்னால முடியல” என மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here