அனைத்து சமூகத்தையும் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..

0
192

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்துகின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க அனைத்து சமூகத்தையும் கொண்டு கமிட்டி அமைக்க வேண்டும்.

அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களை கமிட்டியாக அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. அதுபோலவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, அவனியாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் கிராமத்து கமிட்டியினர் என யாரும் இல்லை.

குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி மற்றும் இயக்கங்களின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு நடத்த இருக்கும் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக நாளை மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும்.

இதற்காக அனைத்துத் தரப்பு மனுதாரர்களை முறையாக நோட்டீஸ் அனுப்பி அழைக்க வேண்டும். நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை முழுவதையும் காணொளியாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here