‘அப்பன் என்பது கெட்ட வார்த்தையா?.. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர்தான்’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

0
201

சென்னை: டெல்லியில் நேற்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில், உதயநிதியை விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிதி கோரியிருந்தது. அப்போது, மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது.

இதற்கிடையில், டெல்லியில் நேற்று (டிச.22) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம்.

இதையும் படிங்க: ‘உங்க அப்பன் வீட்டுப் பணமா?’.. உதயநிதி பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” என கூறினார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பேரிடருக்கான நிதியை மட்டும்தான் கேட்டேன், நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பேரிடர் கால நிதி கேட்ட விவகாரத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அரசியலாக்க முற்படுகிறார்.

அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால், மழை வெள்ளத்தை தனியாக பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை. உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டு கூறி எதையும் நான் அரசியலாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ரூ.4000 கோடி என்னாச்சு?.. உண்மையிலே மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறதா?’ – நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here