‘அமைச்சர்களுக்கென சிறையில் தனி கட்டடம் தேவைப்படும் போல’ – அண்ணாமலை பேச்சு!

0
112

சென்னை: பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் சிறைக்கு செல்லவுள்ள நிலையில், ‘அமைச்சர்களுக்கென சிறையில் தனி கட்டடம் கட்ட வேண்டும் போல’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.

அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களின் வரிப்பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்புக்கு பின், அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டடம் தேவைப்படும் போலத் தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here