அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் நடப்பட்டு வழிபாடு..

0
70

பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை தினத்தன்றும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

அந்த வகையில், இந்தாண்டும் தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here