அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: புதிய மைதானத்தை திறந்துவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

0
152

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பார்வையாளர்கள் வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புதிய மைதானத்தில் நடைபெறும் என மக்கள் எதிர்பார்திருந்த நிலையில் புதிய மைதானத்தின் பணிகள் முடிவடையாத நிலையில், இந்த ஆண்டு வழக்கம்போல் ஊருக்குள் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு புதிய புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதி, அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளன. விழாவின் தொடக்கமாக அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு இன்று முகூர்த்தக் கால் நடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here