அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த இளைஞருக்கு கார் பரிசு..

0
144

மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

அலங்காநல்லூரில் இன்று நடத்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடத்தி முடிக்கப்பட்டு, மாலை 6.15 மணிக்கு நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடம் பெற்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் இரண்டாவது இடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் மூன்றாவது இடம் பிடித்தார்.

அதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கார் பரிசு கிடைத்துள்ளது. 2ஆவது இடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here