‘இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
123

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், கடந்த 22ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது . இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்.

இதனால், இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here