ஈஷாவில் இந்த புத்தாண்டு நாளில் மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்..

0
60

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். 2017ஆம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவிற்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை, கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான கடந்த 1ஆம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.

ஈஷாவிற்கு வரும் பொதுமக்கள் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.

ஆதியோகிக்குச் செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது.

இதன் மூலம், கோயம்புத்தூரில் ஆன்மிக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என ஈஷா தனது அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here