‘உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும்’ – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா!

0
200

வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவு பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. விமானப்படை, கடற்படை மூலமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும். பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது.

கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருந்திருக்கும். தென் மாவட்ட பெருமழை பாதிப்பு காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here