உலக பொருளாதார அமைப்பு மாநாடு.. இந்தியா சார்பில் 100 பேர் பங்கேற்பு..

0
122

உலக பொருளாதார அமைப்பின், 54ஆவது ஆண்டு கூட்டம், டாவோசில் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பை உறுதி செய்யும் சர்வதேச அமைப்பான, உலக பொருளாதர அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், மாநாடு நடத்துவது வழக்கம். அந்த மாநாட்டில், உலகத் தலைவர்கள் பங்கேற்று, சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அதன் தொட்ர்சியாக, 54ஆவது ஆண்டு கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. அதன் தொடக்கம் இன்று (ஜன.15) நடைபெற்றது. இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து, 2ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தாண்டு மாநாட்டில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் பிரச்சினை, பொய் செய்திகள், போர்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். அந்த வகையில், ஸ்மிருதி இரானி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி ஆகிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், காங்கிரசை சேர்ந்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சிவசேனாவைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா மாநில அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here