உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா!

0
70

Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் வரும் 2024 ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இன்று (22.12.2023) கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெற உள்ள புதிய கட்டட பணிகளை கள ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் அவர்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தினை உறுதி செய்வதுடன், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சென்னை வர்த்தக மையப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், சுற்றுப்புறங்களில் உள்ள கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அக்கட்டடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here