‘எம்.ஜி.ஆர்-ஐ போற்றி வணங்குவோம்’ – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

0
172

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ‘X’ வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இவர்போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்.” தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளை அழுத்தமாக முன்வைத்தவர். 6 முதல் 60 வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்’ என்ற அவரது பாடல்போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் ‘புரட்சித் தலைவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here