எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

0
127

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை கொண்டாடடி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழுச்சிகளை பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்தார். மேலும், இந்த பொங்கல் விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனார்.

மேலும், பட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகை மீனா, தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here