ஐயப்பன் கோயில் மகரஜோதி தரிசனம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

0
136

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று (ஜன.15) நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 2.46 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, மகர சங்ரம பூஜை செய்யப்பட்டது. பின்னர் வழக்கமான நெய் அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

அதன் பின்னர், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு 6.30 மணிக்கு திருவாபரண அலங்காரத்தில் தீபாராதனைக் காட்டப்பட்டது. அதன் பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதில், சுவாமி ஐயப்பன், ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார் என பக்தர்கள் நம்புவதால், மகரஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகரஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.

மகரஜோதியை தரிசிக்க வசதியாக 10 இடங்களில் பாதுகாப்புடன் ஜோதியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here