“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்!

0
97

பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பெரியார் குறித்து தனது ‘X’ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!

‘கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்’ என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “அழுத்தப்பட்ட – உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை, இனமான உணர்வூட்டி, தலைநிமி்ர்ந்து நிற்க வைத்த தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான இன்று, முதலமைச்சர், சக அமைச்சர் பெருமக்கள் – கழக நிர்வாகிகளோடு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தோம்.

உருவத்தால் மறைந்தாலும் உணர்வால் தமிழ்நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் நினைவினைப் போற்றுவோம். பகுத்தறிவையும் மானுடப்பற்றையும் முதன்மையாகக் கொண்டு தொண்டாற்றிய தந்தை பெரியாரை நினைவுகூர்ந்து அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளை செய்து முடிக்க உறுதியேற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘தந்தை பெரியாரின் புகழை போற்றி வணங்குகிறேன்’ – எடப்பாடி பழனிசாமி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here