கனமழை பாதிப்பு: ‘பொதுமக்கள் “வாட்ஸ்அப்” மற்றும் “டிவிட்டர்” மூலம் தகவல் தெரிவிக்கலாம்’ – தமிழ்நாடு அரசு..!

0
117

Heavy Rain: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளை “வாட்ஸ்அப்” மற்றும் “டிவிட்டர்” மூலம் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளைத் தெரிவிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிக கனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிடக் களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைத்தளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் (8148539914) மற்றும் டிவிட்டர் (@tn_rescuerelief, @tnsdma) மூலமாகப் பதிவுகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here