கனமழை பாதிப்பு: வீடியோ கால் மூலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

0
119

சென்னை: தொடர் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு பேசி நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், குறிப்பாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார். மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்களிடமும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here