கனமழை பாதிப்பு: 39 மணி நேரம் மரக்கிளையில் இருந்தவர் மீட்பு..!

0
112

திருநெல்வேலி: வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே தோட்டத்தில் இருந்த விவசாயி ஒருவர் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார். சுமார் 39 மணி நேரமாக மரக்கிளையில் தஞ்சம் அடைந்திருக்கிறார். இதனையறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயியை பத்திரமாக மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here