காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை..

0
66

காஞ்சிபுரம் சங்கரமடம் 68ஆவது பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30ஆவது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் இன்று நடைபெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானையின்படி இன்று காலை 7 மணிக்கு ருத்ர ஏகாதசி நடைபெற்றது. தொடர்ந்து மஹா பெரியவருக்கு மதியம் 12 மணிக்கு பூர்ணாஹூதியும், மதியம் 1 மணிக்கு மஹா அபிஷேகமும் நடக்க இருக்கிறது.

அதன் பிறகு இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கரமடத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில், நான்கு ராஜ வீதிகளிலும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் தேனம்பாக்கத்தில் உள்ள மடத்திலும் மஹாருத்ர ஜபம், ஹோமம் ஆகியவை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here