காணும் பொங்கல் பண்டிகை : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்…

0
83

சென்னைவருகிற 17ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு,

சென்னை மெரினா காமராஜர் சாலையில் வரும் 17ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அதன்படி :- காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது. மெரினா கடற்கரைக்கு செல்லும் வாகனங்கள் காமராஜர் சாலையில் அதிகரிக்கும்.

அப்போது, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் வழக்கம் போல கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து செல்லும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை செல்லலாம்.

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். அதேபோல பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி போர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், செயிண்ட் பீட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈ.வி.ஆர். சாலை, மருத்துவ கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here