கீழக்கரை ஜல்லிக்கட்டு : 10 காளைகள் அடக்கி அபிசித்தர் முதலிடம்..!

0
131

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர அரங்கம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூர் கீழக்கரையில் புதிதாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 500 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்தார்.

சமீபத்தில் நடந்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவற விட்டவருக்கு இந்த முறை முதல் பரிசு கிடைத்துள்ளது. இவர் முன்னதாக அலங்காநல்லூரில் நடந்த போட்டியில் அரசியல் காரணமாக முதல் பரிசு கிடைக்கவில்லை என்ன அபிசித்தர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அபிசித்தர் 10 காளைகள் பிடித்து முதல் இடம் பிடித்திருக்கிறார். அபிசித்தருக்கு மகேந்திரா கார் மற்றும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 6 காளைகளை பிடித்து, 2ஆம் இடத்தை சின்னம்பட்டி தமிழரசன் மற்றும் பரத் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here