கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி: மதுரை விளையாட்டு அரங்கை ஆய்வு செய்த உதயநிதி..

0
165

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஜன.19ஆம் தேதி முதல் ஜன.31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டு பதிவில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முக்கிய மைல் கல்லாக அமையவுள்ள Khelo India Youth Games, சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதனையொட்டி, மதுரையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாட்டு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

பாதுகாப்பு வசதி, அடிப்படை சுகாதார வசதிகள், ஓடுதளம் பார்வையாளர் மாடம், வீரர்கள் தங்குமிடம் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, அவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here