இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஜன.19ஆம் தேதி முதல் ஜன.31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் இன்று மாவட்ட விளையாட்டரங்கம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
விளையாட்டுப் பிரிவுகள் (ஆண்கள்); தேர்வுப் போட்டிகள் நடைபெற்றது. தடகளம்- 1500 மீ ஓட்டம், 2000 மீ Steeplechase, குண்டு எறிதல் (5Kg) மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை 8.00 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய ஒன்றியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான #KheloIndiaYouthGames, தமிழ்நாட்டில் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும், சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நான்கு இடங்களில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை வரலாற்றில் இடம்பெறச் செய்திடும் வகையில் நடத்திட பல்வேறு கருத்துக்களை இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.