சிறுமியை தாக்கிய விவகாரம்: ‘மாமனாருக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை’ – திமுக எம்.எல்.ஏ. மருமகளின் வைரல் ஆடியோ..!

0
117

பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (18) என்ற இளம்பெண் வீட்டு வேலைக்குச் சேர்ந்தார். பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி 15ஆயிரம் சம்பளம் கொடுக்காமல் வெறும் 5ஆயிரம் மட்டும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் சிறுமியை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளாது. இளம்பெண்ணை சாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த துன்புறுத்தலில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், “வணக்கம் என் பெயர் மெர்லினா. சமீபத்தில் கடந்த 2, 3 நாட்களாக பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை எதனால் நடக்கிறது என எங்களுக்கு புரியவில்லை.

நான் ஊடகங்களுக்கு கூறுவது ஒரே விஷயம் தான். நிறைய கமெண்ட்ஸ் நிறைய கெட்டபெயரால் திட்டுகிறீர்கள். நடந்தது என்ன என்று புரிந்துகொள்ளாமல் இன்னொருவரை தவறாக பேசாதீர்கள். அரசியல் பின்புலத்தில் இருந்து வருவதால் அதை பயன்படுத்தி அடுத்தவர்களை மிரட்டி கொடுமைக்கார உலகில் நாங்கள் வாழவில்லை. என்னை சுற்றி உள்ளவர்களிடமும் விசாரித்துப் பார்க்கலாம்.

இதனால், மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு 3 நாட்களாக என்னால் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், என் மகளையும் என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறேன். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை.

அந்த பெண்ணை என் வீட்டில் ஒரு பெண்ணாக தான் நான் இதுவரை பார்த்தேன். அது அவளுக்கே நல்லா தெரியும். இந்த தகவலை அந்த பெண்ணிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. உங்களால் முடிந்தால் நான் கூறும் தகவலை அந்த பெண்ணிடம் கூறுங்கள்.

ரேகா உனக்கு அக்காவை பற்றி தெரியும். அக்கா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தவேண்டும் என நினைத்தது இல்லை. என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நீ எதற்காக இப்படி செய்கிறாய் என தெரியவில்லை.

உனக்கு ஏதாவது வேண்டுமானால் என்னிடம் கேட்டு பேசியிருக்கலாமே? எதற்காக நீ இவ்வளவு தூரம் ஒரு குடும்பத்தை பாதிக்க வைக்கிறாரய். அதனுடைய தீவிரத்தன்மை உனக்கு புரியாமல் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறாய். இது சரியல்ல, உனக்கு புரியவில்லை. இப்போது என்னை பற்றி, அண்ணனை பற்றி பேசுகிறாய், பாப்பாவை பற்றி பேசுகிறாய் பரவாயில்லை நீ பேசிவிட்டாய்.

எனது மாமனார் என்னமா செய்தார். எத்தனை ஆண்டு உழைப்பு தெரியுமா? இரவும், பகலும் தூங்காமல் எவ்வளவு பேரை பார்த்து கஷ்ட்டப்பட்டு எங்கள் குடும்பத்தை மேம்படுத்தியிருப்பார். இதனா, என்களது குடும்பத்திற்குள் பெரிய பிரச்சினை ஏற்படுமால்லவாமா? அதையெல்லாம் பற்றி நீ யோசிக்கமாட்டாயா?

தயவு செய்து நான் உன்னிடம் கூறுகிறேன் எந்த புகார் நீ கொடுப்பதாக இருந்தாலும் நீ எங்களை பற்றி பேசு. ஆனால் நீ பொதுவாழ்வில் இருப்பவர்களை கொண்டு பேச வேண்டாம். அது சரியில்லை” என தனது மாமனார் குறித்து பேசியிருக்கிறார்.

சிறுமியை தாக்கிய விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது வரை கைது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here