சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து துறை அறிவிப்பு..

0
89

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் அறிவித்தபடி கடந்த 12ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது

சென்னையில் மொத்தம் 4ஆயிரத்து 404 சிறப்பு பேருந்துகள், 6 இடங்களில் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளாக இயக்கப்பட இருக்கின்றன.

மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவில்லாத பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here