சென்னையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதன் காரணமாக ஜனவரி மாதம் 16, 25, 26 ஆகிய மூன்று தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன.26 ஆகிய 3 தினங்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்ட வேண்டும்.
அந்த மூன்று நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் மதுபானம் விற்பனை விதிகளின்படி மதுபானம் விற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.