‘Christmas Celebration’: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் (vande bharat special train) இயக்கப்படுகிறது.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் சேவை, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான டிச.25ஆம் தேதி சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படவுள்ளது. மேலும், இந்த ரயிலானது பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.25ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘Christmas Celebration’: சென்னையில் 8 ஆயிரம் காவல்துறை பாதுகாப்பு!