‘தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

0
85

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும், வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை வரும் 24ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here