தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
142

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது தமிழ் வளர்ச்சித் துற சார்பில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது உ.பலராமனுக்கும் வழங்கப்பட்டது.

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுக்கும் வழங்கப்பட்டது. பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த்தென்றல் வி.க.விருதும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் விருது 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது பி. சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here