உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆகிய கோவிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலும், வரும் 21ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜன.22ஆம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் 21ஆம் தேதி, விமான மூலம் திருச்சி சென்று ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதரை தரிசனம் செய்ய உள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கமும், ராமேஸ்வரமும், ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன. அதற்காரணமாக இந்த சுவாமி தரிசனம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.