தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..

0
140

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது, அங்கு திரண்ட பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், அளுநர் அக்கா பொங்கல் என கோஷமிட்டனர்.

இந்த நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம்.

இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் தினிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என கூறும்போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது.

தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது?

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என நாம் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here