தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

0
153

வடகிழக்குப் பருவமழை காலமானது ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும், அதன்படி நாளை மறுநாள் தென் இந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வருகிற 19ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here